குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடக்கம் – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜனவரி 3 ஆம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்.

சந்திரயான்-2 திட்டத்தில் அனுப்பப்பட்டு சிறப்பாக செயல்படும் ஆர்பிட்டர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு தகவலை அனுப்பும். வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால், லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. ராக்கெட் ஏவுதளத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது”

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *