தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை முவர் படுகாயம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் ஒன்றான ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லதா மாசான சாமி மற்றும் மற்றொரு வேட்பாளரான இளையராஜா ஆகியோர் போட்டியிட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று மேட்டூர் வாக்குச் சாவடி அருகில் இரு தரப்பினருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இளையராஜா தரப்பினர் பச்சை பெருமாள், 53 வயது, வையற்று பகுதியில் கத்தி குத்துவும்,ஜெயகுமார் வயது 21, முதுகில் கத்தி குத்து மற்றொரு தரப்பினர் ஆன லதா மாசான சாமியின் கணவரான மாசான சாமி தலை, கால்பகுதி வெட்டு காயங்கள் அவரது உறவினர் இயேசு என்ற சண்முகசுந்தரம் ( 58 வயது) முதுகில் (விலா) பகுதில் ராம கிருஷ்ணன் 52 வயது இடது கையில் வெட்டு ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
மேலும் வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் மாரியப்பன் என்பவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிரிழப்பு.