சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் நடைபாதை மற்றும் மெயின் ரோட்டை மறித்து போடப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி
சென்னை திருமங்கலத்தில் (அண்ணாநகர்) இருந்து பாடி சரவணா ஸ்டோர்ஸ் செல்லும் வழியில் ரோட்டை மறித்து பல கடைகள் உள்ளது கடைக்கு வருபவர்கள் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கிறார்கள் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு விபத்தும் ஏற்படுகிறது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாடி ,ரெட்டேரி, மாதவரம், வில்லிவாக்கம் போன்ற அனைத்து பகுதியையும் இணைக்கும் பகுதியாக உள்ளது கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலம் என்பதால்
ரெட்டில்ஸ், குமிடிப்பூண்டி, ஆந்திரா செல்பவர்களுக்கு இந்த வழியாகதான் அனைவரும் செல்ல வேண்டும் இந்த இடத்தில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் தான்
ரோடு மற்றும் மக்கள் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருக்கும் கடைகளை அகற்றி மக்களின் பயன் பாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோள்.
நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ????????????????