
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களை நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஆ.இராசா அவர்கள் சந்தித்து வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், தேர்தல் பணி செயலாளர் க.ராமச்சந்திரன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி, மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.ஏ.முஸ்தபா, மு.பாண்டியராஜ், கே.எம்.ராஜு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் என்.முத்துசாமி, மா.கண்ணன், எம்.சதக்கதுல்லா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.