இலங்கையில் நடைபெறும் வரும் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்திய இலங்கை இனவாத அரசை கண்டித்து. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் அப்துர் ரஹீம் கண்டன உரையாற்றினார் . அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது : இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலை இலங்கையில் வாழும் அத்தனை இஸ்லாமியர்களும் கண்டித்தார்கள் . இந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன . இலங்கை குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களுக்கு இரத்தம் தேவைப்பட்ட நேரத்தில் இலங்கையில் உள்ள எங்களின் கிளை அமைப்பான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அவசர இரத்ததான முகாம்களை நடத்தி இரத்த தானம் வழங்கினார்கள் . அதுமட்டுமின்றி இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து இரத்த தானம் செய்தார்கள் .

இந்த நிலையில் கடந்த வாரத்தில் சில சிங்கள இனவாதக் குழுக்களை சேர்ந்தவர்கள் இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தளங்கள் , வணிக நிறுவனங்கள் , வீடுகள்,வாகனங்கள் போன்றவற்றை அடித்து சூறையாடி பள்ளிவாசல்களை அடித்து நொறுக்கி புனித நூலான திருக்குர்ஆனைத் தீவைத்துக் கொழுதியுள்ளார்கள் இந்தக் கலவரத்தில் 3 இஸ்லாமியர்கள், பலியாகியுள்ளார்கள் பலர் காயமடைந்துள்ளனர் . பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சேதப்படுத்தப்பட்டு்ளன, இலங்கையில் உள்ள பௌத்த இனவாத குழுக்கள், முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து, தாக்கி அழிப்பதை, இன சுத்திகரிப்பு , நடவடிக்கையாகவே , பார்க்கப்படுகிறது, இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையொட்டி, சில தீவிரவாத குழுக்களுக்கு இலங்கை அரசு, தடைவிதித்தது,

பாராட்டுக்குரியது அதேசமயம் இந்த தாக்குதலுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தற்போது சிங்கள இனவாத குழுக்கள் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல், நடத்தி வருவது பெரும், ஆபத்துக்கு குறிய, நடவடிக்கை ஆகும் எனவே இந்த இனவாத குழுக்களையும் இலங்கை அரசு உடனே கண்டறிந்து தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,

இலங்கை அரசு முதலில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறினாலும் அதன் பின்னர் கலவரக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது, இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களின் உயிருக்கும் உடமைக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் வன்முறையில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை உடனே வழங்க வேண்டும்,
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலங்கை தூதரகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது,
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் இலங்கைவாழ், இஸ்லாமியர்கள் அமைதியுடன், அனைத்து தரப்பு மக்களுடனும் இணக்கமாகவே வாழ விரும்புகிறார்கள் ஆனால் இந்த அமைதியை குலைக்க செயல் படும் சிங்கள இனவாத குழுக்களின் செயல்களை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,,
இவ்வாறு அவர் கூறினார்,,,

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *