துன்பத்தில் இருந்த சாமானிய மக்களுக்கு
உதவிய 15 உண்மையான ஹீரோக்களுக்கு
அலர்ட் பியிங் விருது’
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்,
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள்
கவர்னருமான பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் ஆகியோர் வழங்கினர்,
கொலம்பியா ஏசியா மருத்துவமனைகளின் இந்தியாவிற்கான தலைவரும்
மருத்துவ குழு இயக்குனருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராமுக்கு வாழ்நாள்
சாதனையாளர் விருது
டாடா அறக்கட்டளை பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், திரைப்பட நடிகர்
விஜய் சேதுபதி ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான ஐகான் விருது”
சென்னை , செப். 8-2019 :அலர்ட் பியிங் 2019′ விருது வழங்கும் விழா அலர்ட்
அமைப்பு சார்பில் 3வது ஆண்டாக சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்றது.
அலர்ட்’ அமைப்பு அவசர காலங்களில் பதில் அளித்து சாமானிய மக்களின்
உயிர்களை காப்பாற்றும் ஒரு தன்னார்வ லாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.
உயிரைக் காப்பாற்றுவதன் மூலமோ அல்லது பாதுகாப்பதன் மூலமோ
சமூகத்திற்கு பங்களித்த நல்ல மனிதர்களுக்கு விருது வழங்குவதன் மூலம்
மனிதகுலத்தைக் கொண்டாடும் ஒரு தனித்துவமான அங்கீகாரமே அலர்ட்
விருதுகள் ஆகும். அவர்களின் இரக்க குணம் காரணமாக, அது சமூகத்தில் உள்ள
மற்றவர்களுக்கும் உத்வேகமாக செயல்பட வழிவகுக்கிறது. இந்த ஆண்டிற்கான
அலர்ட் விருதுகள் நிஜ வாழ்க்கையில் கதாநாயகன்களாக செயல்பட்டு
உயிர்களை காப்பாற்றிய மற்றும் பாதுகாத்த 15 உண்மையான ஹீரோக்களுக்கு
வழங்கப்பட்டது.
இந்த விருதை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், முன்னாள்
தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான
பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் ஆகியோர் வழங்கினர். இந்த 15 சிறந்த நபர்களை
ஆயுத காவல்படையைச் சேர்ந்த கூடுதல் காவல்துறை இயக்குனர் ஷகீல் அக்தர்,
லிமா தலைவர் டாக்டர் ஜெ.எஸ். ராஜ்குமார், ஆற்காடு இளவரசரின் திவான்
நவாப்சதா முகமது ஆசிப் அலி, நேச்சுரல்ஸ் குழும் சலூன்களின் நிறுவனர்
வீணா குமாரவேல் மற்றும் மாற்றம் நிறுவனர் சுஜித் குமார் ஆகியோர் நடுவர்கள்
இருந்து தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கொலம்பியா ஏசியா
மருத்துவமனைகளின் இந்தியாவிற்கான தலைவரும் மருத்துவ குழு
இயக்குனருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராமுக்கு வாழ்நாள் சாதனையாளர்
விருதும், டாடா அறக்கட்டளை பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், திரைப்பட
நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் இந்த ஆண்டிற்கான ஐகான் விருது வழங்கி
கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விருதுக்காக இந்தியா முழுவதிலும் உள்ள 5 மாநிலங்களில் இருந்து 19
மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேர் அலர்ட் அமைப்புக்கு தங்கள் பரிந்துரைகளை
அனுப்பி இருந்தனர். ‘அலர்ட் பியிங் விருதுகள் 2019″ தனிப்பட்ட வாழ்க்கையில்
அல்லது சமுதாயத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மற்றும்
உயிர்களை காப்பாற்றியவர்கள் என 5 பிரிவுகளில் 15 உண்மையான
ஹீரோக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2 பதிப்புகளும் 33 நிஜ வாழ்க்கை
கதாநாயகர்களின் அற்புதமான கதைகளைக் கண்டன. ‘நன்மை நன்மையைப்
பெறுகிறது’ என்ற பழமொழிக்கு ஏற்ப நிறுவப்பட்ட இந்த விருது இன்னும் பல
நல்ல நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு ஒரு உத்வேமாக இருப்பதை நோக்கமாக
கொண்டுள்ளது.
அலர்ட் பியிங் அவார்டு 2018 நிகழ்ச்சி கடந்த ஆண்டு துவங்கப்பட்ட
நிகழ்ச்சியாகும். மருத்துவ அவசரநிலை மற்றும் தன்னார்வ முதல் பதிலுடன்
தொழில்முறை உதவியின் வருகைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க
துவக்கப்பட்ட அலர்ட் வாய்ஸ் (அவசர காலத்தில் தன்னார்வலர்)
பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அலர்ட் தீவிர திட்டம்
மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவின்
மதிப்பீட்டிற்கு பிறகு தன்னார்வ முதல் பதில் அளிப்பவர்களாக அலர்ட் வாய்ஸ்
திட்டத்தில் சுமார் 450 தன்னார்வலர்கள் பயிற்சி மற்றும் பட்டம் பெற்றுள்ளனர்.
அலர்ட் வாய்ஸ் உண்மையிலேயே அனைவருக்கும் வித்தியாசமான
வழிகாட்டியாக உள்ளது.
அலர்ட் பியிங் விருதுகள் 2019 குறித்து அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம்
கூறுகையில், அலர்ட் மூலம் நிஜ வாழ்க்கை ஹீரோக்களின் நம்ப முடியாத. கதைகளை வெளிக்கொண்டு வர விரும்புகிறோம். அவர்கள் வாழ்க்கையில்
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியதன் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மற்ற உயிர்களை காப்பாற்றும் நிஜ வாழ்க்கை
ஹீரோக்களுக்கு சட்டங்கள் சாதகமாக்கப்படுவதால், உயிர்காக்கும்
நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும்
பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தல், அலர்ட் பியிங் விருதுகள் போன்ற
அங்கீகாரங்கள் பல்வேறு வழிகளில் உயிர்களை காப்பாற்றிய ஹீரோக்களை
வெளிக்கொண்டு வருவதோடு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
ஹீரோவையும் வெளிக்கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், விழிப்புணர்வு பட்டறைகள் மூலம் சுமார் 1 லட்சம்
பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும் அலர்ட் வாய்சில் 100க்கும்
மேற்பட்ட திறமையான முதல் பதிலளித்தவர்களை சேர்த்துள்ளோம்.
இந்தியாவின் சமூகம் சார்ந்த . தொழில்நுட்ப அடிப்படையிலான முதல்
பதிலளிக்கும் நெட்வொர்க் இதுவாகும். நாங்கள் இதுவரை இந்தியா முழுவதும்
உள்ள 225 கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் 180 கார்ப்பரேட்
நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி
அளித்துள்ளோம் என்றும் கலா பாலசுந்தரம் தெரிவித்தார்.
அலர்ட் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர். திரிவேதி கூறுகையில், சாலை
போக்குவரத்து விபத்துகளில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
மேலும் இது உலக அளவில் அதிக மாரடைப்பு ஏற்படும் தலைநகரமாகவும்
அறியப்படுகிறது. மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எண்ணற்ற
குடிமை துயரங்கள், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட
பேரழிவுகள், இயற்கைக்கு மாறான விபத்துக்கள் போன்றவை உள்ளன. இது
மிகவும் உகந்த சூழ்நிலை இல்லை என்றபோதிலும், நம்பிக்கையின் கலங்கரை
விளக்கமாக திகழும் நிஜ வாழ்க்கை கதாநாயகர்களை நாம் காண்கிறோம்.
அலர்ட் பியிங் விருதுகள் என்பது ஒருவரது வாழ்க்கையை நேரடியாகவோ
அல்லது மறைமுகமாகவோ பாதுகாக்க அல்லது காப்பாற்ற உதவிய அத்தகைய
நல்ல தன்னார்வலர்களை அங்கீகரிப்பதன் மூலம் மனிதகுலத்தை
கொண்டாடுவது ஆகும். அவர்கள் தனிநபர்கள், அமைப்புகள், கடமை மற்றும்
சமூக முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சேவையில் ஈடுபடும் நபர்களாகவும்
இருக்கலாம் என்று தெரிவித்தார்.
V. #BALAMURUGAN #9381811222