Advertisement 300 × 60
BREAKING NEWS
Uncategorized

ரெவிவோ கிளினிக் அறிமுகப்படுத்தும் நீரிழிவு நோய் மீட்புத் திட்டம்

By admin · October 26, 2026 · 1:22 pm

சென்னை, அக்டோபர் 26, 2026: உடல் பருமன், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற சென்னையைச் சேர்ந்த ரெவிவோ கிளினிக், நவம்பர் 14-ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து மீளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான மருத்துவப் பராமரிப்பு, நோயாளிகளுக்கான சிகிச்சைப் பொருத்தம் மற்றும் நீடித்த பலன்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சௌமியா அன்புமணி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். ரெவிவோ கிளினிக்கின் இணை நிறுவனர், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர் அருண் ராகவன், திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் முக்கிய அம்சங்களை விளக்கினார்.ரெவிவோ கிளினிக்கின் இத்திட்டத்தின் முக்கியத் தனித்துவம், கட்டமைக்கப்பட்ட மருத்துவ மதிப்பீட்டு முறையாகும். இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு நபருக்கும் இத்திட்டம் பொருத்தமானதா என்பதும், நீரிழிவு நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதும் முதலில் மதிப்பிடப்படும். திட்டத்தில் பங்கேற்கத் தகுதியற்றவர்களுக்கு, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான பொருத்தமான நீரிழிவு மேலாண்மை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.மருத்துவர்களின் நேரடி வழிகாட்டுதலுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், மருத்துவப் பராமரிப்பு, தனிநபருக்கேற்ற ஊட்டச்சத்து ஆலோசனை, உடல் செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், சிகிச்சையின் மருத்துவப் பலன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.*தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சௌமியா அன்புமணி அவர்கள், இத்திட்டத்தின் தொடக்கம் குறித்துக் கூறியதாவது* , “ரெவிவோ கிளினிக்கின் முதன்மைத் திட்டத்தின் தொடக்கத்திற்காக அக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா ஏற்கெனவே உலகின் நீரிழிவு நோய்த் தலைநகரமாகக் கருதப்படும் சூழலில், இந்நோயை அணுகும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வாழ்க்கைமுறைத் தேர்வுகளை ரெவிவோ கிளினிக் வலியுறுத்தி வருவது பாராட்டுக்குரியது. நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், சிலருக்கு நோயின் தீவிரத்தைக் குறைத்து மீள்நிலையை அடையவும் உதவும் இம்முயற்சி குறிப்பிடத்தக்கது. மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி, நீடித்த தாக்கத்தை உருவாக்கும் இக்குழுவினரின் முயற்சிகள் தொடர்ந்து வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”*இத்திட்டத்தின் அறிமுகம் குறித்துப் பேசிய டாக்டர் அருண் ராகவன்,* “நீரிழிவு நோயிலிருந்து மீள்வது அறிவியல்பூர்வமாகச் சாத்தியமானது. இருப்பினும், அதற்குத் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு அவசியம். அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நபருக்கும் இத்திட்டம் பொருத்தமானதா என்பதை மதிப்பிடுவதற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நீரிழிவு நோயிலிருந்து மீள்வது, இந்நோயை நாம் கையாளும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இச்செயல்முறை அறிவியல் ஆதாரங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும். தகுதியுடைய நபர்கள் தங்களது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான தெளிவான, மருத்துவர் வழிகாட்டுதலுடனான பாதையை உருவாக்குவதுடன், அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.*மேலும் இத்திட்டத்தின் தொடக்கம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ரெவிவோ கிளினிக்கின் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துப் பயிற்சியாளரும், வாழ்க்கைமுறை ஆலோசகருமான அரவிந்த் அசோக்,* “வாழ்க்கைமுறையை மேம்படுத்துவது என்பது மேற்கத்திய உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது என்று பொருளல்ல. சுத்தமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதுடன், ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை மேற்கொள்வது போன்ற அடிப்படைப் பழக்கங்களுக்குத் திரும்புவதன் மூலம், நீரிழிவு நோயை மக்கள் சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவ முடியும் என நாங்கள் நம்புகிறோம். இத்தகைய நடைமுறைகள் புதிதானவை அல்ல என்றாலும், அவற்றை அனைவரும் எளிதில் பின்பற்றக்கூடியதாகவும், நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து கடைப்பிடிக்கக்கூடியதாகவும் மாற்றுவதே எங்களது நோக்கம். இதன் மூலம், நீரிழிவு நோயுடன் வாழும் நபர்கள் தங்களது வாழ்க்கைமுறையில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதே எங்கள் இலக்கு” என்றார்.கட்டமைக்கப்பட்ட தகுதி மதிப்பீடு மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறை மூலம், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத் துறையில் புதிய தரநிலையை உருவாக்க ரெவிவோ கிளினிக் இலக்கு கொண்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், நீரிழிவு நோயிலிருந்து மீள்வது குறித்த தவறான தகவல்களையும் கருத்துகளையும் எதிர்கொள்ளவும் இக்கிளினிக் முயல்கிறது.