போலிசை தாக்கிய இளைஞர் மீது வழக்கு
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு.தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது விளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் சிறப்பு காவல் உதவியாளர் ரஹீமை தாக்கினார். இந்த வழக்கில் மேற்கு காவல் துறையினர் இளைஞரை கைது செய்து அவர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதே போல் இந்த சம்பவத்தின் போது மற்றொரு இளைஞர் திருக்கானூர்ப்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
