Advertisement 300 × 60
BREAKING NEWS
News

கோயம்பேடு பகுதியில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது.

By admin · August 18, 2026 · 12:34 pm

சென்னை, கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 18 வயது பெண் ஒருவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் மேற்படி பெண்ணை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும், தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், காதலிக்க மறுத்தால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி நபரை பிடித்து விசாரணை செய்ததில், புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி புகார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரி பாலாஜி, வ/24, நெற்குன்றம், சென்னை என்பவரை நேற்று (17.08.2026) கைது செய்தனர். விசாரணையில் எதிரி பாலாஜி ஆட்டோ ஓட்டுநர் எனத் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட எதிரி பாலாஜி விசாரணைக்குப் பின்னர் நேற்று (17.08.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.