டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டம்

வரும் செப்- 24 ஆம் தேதி திறப்பு விழா !

அமைச்சர் கடம்பூராஜூ தகவல்

திருச்செந்தூரில் கட்டப்பட்டுவரும் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும்,
சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த தினமான செப்டம்ர் 24 ஆம் தேதியன்று இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் வந்து திறந்து வைக்கும் வகையில் பிரமாண்ட விழா நடத்தப்பட திட்டமிட்டுள்ளதாகவும்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சென்னை
கோட்டூர்புரத்தில் கடம்பூரை பூர்வீகமாக கொண்ட நாடார் சமுதாய மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். கடம்பூரை பூர்விகமாக கொண்ட இளம் தொழிலதிபரான கோட்டூர் கே.குரு- என்பவரின் குழந்தை கிரிஷிகாவின் முதலாமாண்டு பிறந்நாளை முன்னிட்டு
பள்ளிக்கூட மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் இலவச மரகன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்டம்ர் 5) கோட்டூர்புரத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்தி பேசும்போது கூறியதாவது….

கடம்பூரை பூர்வீகமாக கொண்ட மக்கள் சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று தொழில்துறை உள்ளிட்ட பலதுறைகளிலும் சாதனை படைத்து கடம்பூருக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் இளம் தொழிலதிபரான கோட்டூர் குரு, கோட்டூர் புரத்தில் அனைத்து சமுதாய மக்களாலும் மதிக்கம்டும் அளவுக்கு பல நற்பணிகளை செய்து வருகிறார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஆண்டுதோறும் பெரிய அளவில் விழா நடத்தி நலதிட்ட உதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது.
தனது குழந்தையின் முதலாமாண்டு பிறந்தநாளையோம் நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,சுற்றுசூழலை பாதுகாக்கும்வகையில் மரம் வளர்ப்பதை ஊகௌகுவிக்கும் வகையில் இலவச மரக்கன்றுகள் வழங்கியும் கொண்டாடடுவது பாராட்டத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் எனக்கு முன்னர் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும்,
எர்ணாவூர் நாராயணணும்

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் குறித்து குறிப்பிட்டார்கள்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய காரியமாகும்.

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த

22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மணிமண்டப கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது

டாக்டர் சிவந்திர ஆதித்தனாரின்
பிறந்த தினமான எதிர்வரும்

செப்டம்பர் 24 ஆம் தேதி
இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதனை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
,எர்ணாவூர் நாராயணன்,
கராத்தே தியாகராஜன், கடம்பூர் எஸ்எஸ்எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று குழந்நதையை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு மரகன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இறுதியில் கோட்டூர்.குரு-ராதிகா நன்றி கூறினர்.

V. #BALAMURUGAN 9381811222

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *