தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கல்லூரி முதல்வர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்..
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உணவு பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையாளர் வனஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் சென்னையில் உள்ள 46 கல்லூரிகளில் இருந்து சுமார் 37 கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் மற்றும் விடுதி காப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு கல்லூரி வளாகங்கள் உண்ணத் தகுந்த கல்லூரி வளாகமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் இது குறித்து சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில்:-
கல்லூரி விடுதிகளில் சுத்தமான முறையும் சரியான விதியும் உணர்வுகளை பராமரித்து வரவேண்டும். உணவுப் பொருட்களில் பாமாயில் ஒரு தடவை மட்டுமே உபயோக பட வேண்டும் என்றும் ஏதேனும் உணவுகளில் குறைகள் இருந்தால் உணவுத்துறை பாதுக்காப்பு இரகசிய தொலைபேசி எண் கொள்ளலாம். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 36 கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நல்ல ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே கல்லூரி உணவகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகிகள் உத்தரவிட வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்களுக்கு உணவு மற்றும் சுகாதாரமான வாழ்வியல் குறித்தும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கூறினார்.
பேட்டி: Dr.ராமகிருஷ்ணன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி,