கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 1569 வீடுகளை அரசு இடித்து புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க உள்ளது .
இது குறித்து மக்களிடையே அரசு அதிகாரிகள் தலைமை யில் கருத்து கேட்புக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கோட்டூர்புரம் சித்ரா நகர் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இந்த குடியிருப்பு பகுதியில்அருகில் தான் பிள்ளைகள் பள்ளிகூடம் , படிக்கின்றனர். வேலை வாய்ப்புகளும் இருப்பிடத்திற்கு தகுந்தவாறு இங்கிருந்து தான் சென்று வர வேண்டும். இதே இடத்தில் தான் அனைத்தும் வசதிகளையும் கட்டமைத்து உள்ளோம். பாதுகாப்பாகவும் சென்று வருகிறோம் .
அரசு அதிகாரிகள் திடீர் என்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் குடியிருப்போரின் வீடுகளை காலி நோட்டீஸை ஒட்டுவது எங்கள் எதிர்காலத்தை பயமுறுத்துவதாகவும், செய்துள்ளது, இதனால்
எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் மேலும் எங்களுக்கு அரசு அறிவிப்பில் தெரிவித்திருக்கும் திட்டங்களிலும், வாக்குறுதிகளிலும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை . குடியிருப்போருக்கு இது குழப்புவதாக உள்ளது
எனவே கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பாக
12 தீர்மானங்களை முன்
வைக்கிறோம் .
அதில் இந்த குடியிருப்பு எப்போது இடித்து
எத்தனை வருடத்தில் கட்டி தரப்படும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஒரே நேரத்தில் அனைத்து கட்டிடத்தையும் இடிக்க கூடாது.
குடியிருப்போர் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு சென்றால் வாடகை அரசு தர வேண்டும் .
உள்ளிட்ட 12 கோரிக்கை முன்வைத்தோம் அரசு அதிகாரிகளும் அதை கேட்டனர் .
மேலும்
இப் பிரச்சினை தொடர்பாக துறை சார்ந்த அமைச்சரை நேரில் சென்று எங்கள் குறைகளை மனுவாக அளிக்கஉள்ளோம் .
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் அறவழி போரட்டம் தொடரும் என
கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்க செயவாளார் அருண் தெரிவித்தார். இக்குறை கேட்பு கூட்டத்தில் 500ற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்…
V. #BALAMURUGAN 9381811222