இகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி 

                                      ஜாதி ஒரு தனி மனிதனின் வாழ்கையை

                               எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்

                     

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி    தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது  வண்ணக்கிளி பாரதி எனும்  பெயரின் சுருக்கமாகும்.

இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன்,  கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  –   S.சக்திவேல்

இசை   –  முஜிப்ரஹ்மான்

வசனம்  – ரா,கண்ணன்

பாடல்கள்  –  மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி

எடிட்டிங்   –  G.சந்திரகுமார்

கலை  –  சாய்மணி

நடனம்  – ரமேஷ்

சண்டை  – நைப் நரேன்

தயாரிப்பு மேற்பார்வை –  சங்கர்

நிர்வாக தயாரிப்பு –  ராமு

கதை, தயாரிப்பு  –  ஸ்சொப்பன் பிரதான்

திரைக்கதை, இயக்கம்  –  இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற

படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது..

ஒரு தனி மனிதன் அவனோட ஜாதிய மறச்சு வாழும்போது  ஈசியாக வாழ்ந்து விடுகிறான்.
ஆனால் அவன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் எனத் தெரிய வரும்போது அது அவனது வாழ்கையை  குழப்புகிறது அல்லது கஷ்டத்தில் ஆழ்த்துகிறது இதுதான் இந்த படத்தின் கதை.

 பாரதி என்னும் இளைஞன் வண்ணக்கிளி என்னும் பெண்ணை காதலிக்கிறான், அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழ தொடங்கும்போது  ஜாதி வெறி அந்த அப்பாவி காதலர்களை எப்படி விரட்டி விரட்டி கொள்கிறது என்பதுதான் இந்த படம்
சமூக நியாயம்  கிடைக்காத ஒரு தனி மனிதன்  எப்படி தன்னை தானே மறைத்துக்கொண்டு
வாழ வேண்டியிருக்கிறது. என்கிற அவலத்தையும் அழுத்தமாகச் சொல்ல முயல்கிறது இந்த படம்
இந்த படத்தில் வரும் பாரதியைப்  போல யாரவது ஒருவர் நம் அருகிலும் வாழலாம். எனவே மனிதன்
சக மனிதனை தனக்குச் சமமாக மதிக்க வேண்டும் என்பதையும் ஜனரஞ்சகமாக பாடல்கள் மற்றும்
சண்டைக்காட்சிகளோடு சொல்ல முயன்றிருக்கிறோம் என்கிறார் இகோர்.  

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *