இந்தியாவில் ரீடெய்ல் செயல்பாடு அடிப்படையில் ஈக்விட்டி உரிம ஒப்பந்தங்களையும், நிதித்தயாரிப்புகளின் விநியோகத்திலும் முன்னணியில் இருக்கும், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் (ஐ-செக்) [ICICI Securities (I-Sec)],, முதலீட்டாளர்களின் முதலீட்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இத்தொகுப்பில் இருந்து முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற முதலீட்டை ஒரேயொரு சொடுக்கில் மேற்கொள்ளமுடியும் என்பது இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இத்தொகுப்பானது, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான முதலீட்டு வாய்ப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது. குறிப்பாக, ஹெச்.என்.ஐ முதல் டிஐஒய் எனப்படும் டு இட் யுவர்செல்ஃப் வாய்ப்புகள் உள்ளிட்ட ரீடெய்ல் வரை [HNI முதல் Retail, DIY (Do It Yourself)] இதில் அடங்கும்
இதன் மூலம், ஒரு முதலீட்டாளர்கள், தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் ஏராளமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து தங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்யலாம். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பரஸ்பர நிதி திட்டங்கள் அனைத்தும் பல்வேறு தரம் மற்றும் அளவு அடிப்படையிலான அளவீடுகளின் அடிப்படையிலான பகுப்பாய்விற்குப் பிறகு [extensive analysis on both qualitative and quantitative parameters] .தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பில் ’ஆபத்தில்லா ஈக்விட்டி’ [pure equity] முதல் ’ஆபத்தில்லா கடன்’ [pure debt] வரையும், அல்லது இவை இரண்டும் கலந்த வாய்ப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் மூலம் வளர்ச்சி, முழு வளர்ச்சிக்கான முன்னேற்றம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வரி சேமிப்பு [growth, optimisation, stability, preservation, tax savings]. ஆகியவற்றையும் வழங்குகிறது. இதனுடன் இத்தளமானது தொகுப்புகளின் நிலை குறித்த விவரங்கள் மற்றும் முதலீடு செய்த தொகுப்புகளின் செயல்திறனை தனித்தனியாக அறியும் வாய்ப்பையும் அளிக்கிறது.
“எங்களது பரஸ்பர நிதி முதலீட்டாளர்களிடமிருந்து நாங்கள் மீண்டும் மீண்டும் பெறுகின்ற ஒரு பின்னூட்டம் என்னவென்றால், பரஸ்பர நிதி தொடர்பான ஒரு திட்டத் தேர்வைச் செய்வதற்கு முன்பு அவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய ஆராய்ச்சியின் அளவு, அதன்பிறகு முதலீடு செய்த திட்டத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே. இந்த பிரச்னைகள் மற்றும் தொடர் முயற்சியிக்கான மெனக்கெடலில் இருந்து எங்களது முதலீட்டாளர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாங்கள் ஒரே சொடுக்கில் மேற்கொள்ளும் முதலீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம், அங்கு ஒரு தனிநபரின் குறிக்கோள்கள் மற்றும் அபாய வாய்ப்புகளின் அடிப்படையில், ஒரு திட்டத்தின் முந்தைய வருமானம் எவ்வளவு, எதிர் காலத்தில் எந்தளவிற்கு பலனளிக்கும் வளர்ச்சியை அடையும் என்பதையும் காட்டும் எங்களது விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து தங்களுக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க முடியும். நாங்கள் வழங்கும் தொகுப்பு பெருமளவிலான தொகை மற்றும் எஸ்ஐபி முதலீட்டு முறைகள் ஆகிய இரண்டு வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதனால் எங்களது தொகுப்பு முதலீட்டாளர்களுக்கான உபயோகமுள்ள முதலீட்டு தளமாக இருக்கும்’’ என்கிறார் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. விஜய் சந்தோக். [Mr. Vijay Chandok, MD & CEO, ICICI Securities.]
இந்த தளம் முதலீட்டாளர்களுக்கு தங்களது ‘இலக்கு’ [‘Goal’] எதுவரை என்பதை வரையறுக்கவும், மேற்கொண்ட ஒவ்வொரு முதலீட்டின் ‘இலக்கின் நிலை விவரங்கள்’ [‘Goal Details’] மூலம் அதன் பலன் என்னவாக இருக்கிறது என்பதையும் தனித்தனியாக ‘ கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. முதலீட்டு முடிவை எடுக்கும்போதே, எஸ்.ஐ.பி.-களின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்குமென்பதையும் எளிதில் காண உதவுகிறது. தேவைப்பட்டால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு தொகையை மீண்டும் மறு வரையறை செய்யவும் உதவுமகிறது.
தொகுப்புகளில் உள்ள திட்டங்கள் ஐ-செக் ஆய்வுக் குழுவால் [I-Sec research team] தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும். மேலும் மதிப்பாய்வின் அடிப்படையில், வளர்ந்து வரும் சந்தை மற்றும் திட்ட மதிப்பீட்டின் படி தேவையான மாற்றங்கள் செய்யப்படும். எனவே முதலீட்டாளர்கள் திட்டங்களைத் தேர்வு செய்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை. சரிவர பலன் அளிக்காத திட்டங்களில் இருந்து வெளியேறி, நன்றாக பலன் அளிக்கும் திட்டத்தில் மறுமுதலீடு செய்யவும் வாய்ப்புகள் அளிக்கிறது ஐ-செக்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பற்றி….:
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் (ஐ-செக்) [ICICI Securities Limited (I-Sec)], என்பது ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனம் ஆகும். 1995-ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் தமது செயல்பாடுகளைத் தொடங்கியது. பின்னர் வாடிக்கையாளர்களை அடிப்படையைாகக் கொண்டு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி தமது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. ஐ-செக் நிறுவனம் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாகும். வங்கித்துறை முதலீடுகள், நிறுவனத் தரகு, சில்லறை தரகு, தனி வள மேலாண்மை, நிதி தொடர்பான சேவைகள் விநியோகம் [investment banking, institutional broking, retail broking, private wealth management, financial product distribution.] என பலதரப்பட்ட விரிவான சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. “தேசத்தின் வளத்துக்காக தகவல் விளக்கம் மூலமான அணுகுமுறைகளை உருவாக்குவது” [‘Creating Informed Access to the Wealth of the Nation’] என்ற அடிப்படையில் செயல்படும் ஐ-செக் நிறுவனம், பெரு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அதிக சொத்து மதிப்புடைய தனி நபர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் [corporates, financial institutions, high net-worth individuals and retail investors.] என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஐ-செக் நிறுவனம் தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பைப் பங்குச் சந்தை (பிஎஸ்இ) ஆகியவற்றில் பட்டியல் இடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு என்ற www.icicisecurities.com இணையதளத்தைப் பார்க்கலாம்
For further details, contact:
ICICI Securities Ltd.
Rabin Ghosh
rabin.ghosh@icicisecurities.com
+91 98 205 30306
Adfactors PR Ltd.
Harsh Trivedi
harsh.trivedi@adfactorspr.com
9987218372

Disclaimer
ICICI Securities Ltd acts as a distributor for Mutual Funds. AMFI Regn. No.: ARN-0845. Please note that Mutual Fund Investments are subject to market risks, read the scheme related documents carefully before investing for full understanding and detail.
Except for the historical information contained herein, statements in this release which contain words or phrases such as ‘will’, ‘expected to’, etc., and similar expressions or variations of such expressions may constitute ‘forward-looking statements’. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results, opportunities and growth potential to differ materially from those suggested by the forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to, the actual growth in broking business and other financial services in the countries that we operate or where a material number of our customers reside, our ability to successfully implement our strategy, including our use of the Internet and other technology our exploration of merger and acquisition opportunities, our ability to integrate mergers or acquisitions into our operations and manage the risks associated with such acquisitions to achieve our strategic and financial objectives, our growth and expansion in domestic and overseas markets, technological changes, our ability to market new products, the outcome of any legal, tax or regulatory proceedings in India and in other jurisdictions we are or become a party to, the future impact of new accounting standards, our ability to implement our dividend policy, the impact of changes in insurance regulations and other regulatory changes in India and other jurisdictions on us. ICICI Securities Limited undertakes no obligation to update forward-looking statements to reflect events or circumstances after the date thereof.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *