இந்த பெண்ணை பார்த்த உடனே காதல்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை யாராலும் மறக்க முடியாது… கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நிகழ்ந்த சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் திரைப்படம் ஒன்றை இயக்கினார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரித்தார்,
அப்போது இந்த படம் முதலில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் உருவாகி பின்னர் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன இக் கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு உள்ளது நுங்கம்பாக்கம் என தற்போது உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டீஸர் வெளியானதை அடுத்து சுவாதியின் தந்தை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் மனு அளித்தார். பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பலர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
21/7/2019 இரவு 8.30 மணிக்கு
லீ மேஜிக் பிரிவியூ திரையரங்கில் ரவித்தேவன் தயாரிப்பில், டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள ‘நுங்கம்பாக்கம்’ படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார்.
1.40 மணி நேரம் ஓடக்கூடிய ‘நுங்கம்பாக்கம்’ படம் பார்த்த பின்னர் தொல்.திருமாவளவன்
செய்தியாளர்களிடம் பேசிய போது , ‘நுங்கம்பாக்கம்’ திரைப்படம் உள்ளது உள்ளபடியே இயக்குனர் காட்சி படுத்தியுள்ளார். ஆனால் படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே தனக்கு உடன்பாடில்லை என கூறி, ‘நுங்கம்பாக்கம்’ படம் வெளியிடுவதில் எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவித்தார்.
இதனால் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வந்த ‘நுங்கம்பாக்கம்’ படம் இன்று சிக்கல்கள் தீர்ந்து விரைவில் திரைக்கு வரும் என்று கூறினார் .