வாரிசு அரசியல் தான் திராவிட மாடல் அரசு
எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பேட்டி

தி.மு.க.,வின் திராவிட மாடல் அரசு, வாரிசு அரசியலை மையப்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது,” என, பா.ஜ., – எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியல் இனத்தவருக்கு துணை முதல்வர் பதவியோ, முக்கிய இலாகா அமைச்சர் பதவியோ வழங்க, சில தினங்களுக்கு முன் வலியுறுத்தியிருந்தேன். அது நிறைவேறவில்லை.

திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால், அது சம நீதியாக இருக்க வேண்டும்; அப்படி நடக்கவில்லை. தி.மு.க.,வில் உள்ள மூத்த தலைவர் மகனுக்கு, அமைச்சர் பதவியை வழங்கியுள்ளனர்.

திராவிட மாடல் என்பது, வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் உள்ளது என்பதை, தொடர்ந்து தி.மு.க., நிரூபித்து வருகிறது. ஆனால் பா.ஜ., வில், கடைநிலை ஊழியரும் கூட, நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என்பதை, பா.ஜ., பிரதிபலித்தபடியே உள்ளது.

பா.ஜ., மாநில தலைவர் மீது, சட்ட நடவடிக்கை என்றனர்; குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறது. தி.மு.க., சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அமைச்சர் தியாகராஜன் ஆடியோவின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *