ஊராட்சி மன்ற துணைத்தலைவரை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு
அன்னூர் ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது
குன்னத்தூர் ஊராட்சியில் 9 வது வார்டு உறுப்பினராக மூர்த்தி என்பவர் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் ஊராட்சி மன்றத்திற்கும், தலைவருக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அது மட்டுமல்லாமல் அரசு திட்டங்களுக்கு எதிராக கருத்துக்களையும் பரப்பி வருகிறார். தாம்தான் ஊராட்சித் தலைவர் போலவும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். மேலும், ஊராட்சியில் வேலை செய்யும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.
நாங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று கேட்டால் நாங்கள் 5 மாதங்களுக்கு முன்பே துணைத்தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் போட்டு அனுப்பி வைத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். ஆகவே இவரை துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பேட்டியின்போது ஊர் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இருந்தனர்.