நீர்த் தேக்க தொட்டி திறப்பு விழா
பல்லடம்.
திருப்பூர் வடக்கு மாவட்டம்பல்லடம் கிழக்கு ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சபரி நகரில் 13 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவினை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றியகழக செயலாளர் .நா.சோமசுந்தரம், பல்லடம் மேற்கு ஒன்றியகழக செயலாளர்.சுகிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி, ஆறு முத்தம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன், துணைத் தலைவர் செல்லதுரை, வார்டு உறுப்பினர் முத்து குமாரசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.