போடாத சாலைக்கு பணப்பட்டுவாடா: கோவை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
கோவை மாநகராட்சியில் 2019- 20ம் நிதியாண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் சாலை அமைக்காத
17 சாலைகளுக்கு ரூ.198 லட்சம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தெரிவித்த செய்திக்கு மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 2019 -20ம் நிதியாண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு மண்டலம் வார்டு எண் 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில் சாலை அமைக்காத 17 சாலைகளுக்கு ரூ.198 லட்சம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 2019 -20ம் நிதியாண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வடக்கு மண்டலம் வார்டு எண் 38,39,40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில் 17 சாலைகள் அமைப்பதற்கு 19.11.2019 அன்று நிர்வாக அனுமதி பெறப்பட்டது.
மேற்கண்ட 17 சாலைப்பணிகளில் 9 சாலைகள் நிர்வாக அனுமதி பெறப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8 சாலைகள் அதே இடங்களில்
நிர்வாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. இதற்கு திருத்திய நிர்வாக அனுமதியோ அல்லது பின்னேற்பு அனுமதியோ பெறப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
இதுகுறித்து அப்போது பணியிலிருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடந்த 2021-ம் ஆண்டு முதல் உரிய அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகிறது என மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.