மேட்டுப்பாளையம் எஸ்ஜிகே மருத்துவமனையில் 30ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காட்டூர் எஸ்ஜிகே டாக்டர் ஹரிஹரன் மருத்துவமனை, எஸ்ஜே கிராப்ட் கருத்தரித்தல் மையம் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாமை நடத்தின.
முகாமிற்கு எஸ்ஜிகே மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் விஜயகிரி தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி பூர்ணிமா விஜயகிரி வரவேற்று பேசினார்.
முகாமில் எஸ்ஜே கிராப்ட் கருத்தரித்தல் மையத்தின் தலைமை மருத்துவர் சுமாநடராஜன், குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஜெயஸ்ரீ நடராஜ், பிரியாம்பிகா மற்றும் குழுவினர், குழந்தை இல்லா தம்பதிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
கர்பப்பை பரிசோதனை, விந்தணு பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை, மருத்துவமனை மேனேஜர் சங்கரநாராயணன் மற்றும் பணியாளர்கள், செவிலியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில், எஸ்ஜே மருத்துவமனை பிஆர்ஓ ஜேம்ஸ் நன்றி கூறினார்.