அரிவாள் செல் நோய் பாதித்த நபர்களுக்கு ஒட்டுமொத்த நிவாரணத் திட்டம்
-பேராசிரியை டாக்டர் துளிகா சேத்
ரத்த அறிவியல் துறை,
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை
இந்தியாவில் அரிவாள் செல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரிவாள் செல் நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோயைக் கண்டறிதல் தொடர்பான திட்டத்தின் மூலம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில் அமைந்துள்ளது. ‘அரிவாள் செல் நோய்’ என்பது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வம்சாவழியில் வரும் மரபணுப் பிழை நோய்.
இந்தவகை நோய் தாக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது தட்டு வடிவில் இருக்கிற சிவப்பணுக்கள் அரிவாள் போன்று மாறிவிடுவதால் இந்தப் பெயரைப் பெற்றது. பொதுவாக, தட்டு வடிவில் இருக்கும் சிவப்பணுக்கள் நெகிழும் தன்மையைப் பெற்றுள்ளதால் ரத்தக் குழாய்களில் ஒட்டாமல் பாயும். மாறாக, அரிவாள் உயிரணுக்கள் ஒட்டும் தன்மையுடன் இருப்பதால், ரத்தம் உறைந்து விடும்; இதனால் ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகள் ஒட்டிக்கொண்டு, அடைப்பை ஏற்படுத்திவிடும். அப்போது போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் உறுப்புகள் செயலிழக்கும். குழந்தைகளைக் கூட தாக்கும் இந்த நோய் கிட்டத்தட்ட பக்கவாத நோய் போன்ற தன்மை கொண்டதாகும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேர்வு நடைபெறும் காலங்களிலும், இதர மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளிலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நோய் தாக்கியவர்களுக்கு தொற்று நோய்களால் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்படும்.
பழங்குடியினருக்கும், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மேலும் அவர்களால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பரிசோதனையோ, சிகிச்சையோ செய்ய முடியாத நிலை உள்ளது. பழங்குடியின மக்களை தவிர்த்தும், பலரை இந்த நோய் தாக்கியுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரத்தப்புரத நோய்க்கான சிகிச்சை முறைகளின் விளைவாக அரிவாள் உயிரணு நோய் தாக்கப்பட்டவர்களின் நிலைமை மேன்மை அடைந்து வருகிறது. மத்திய பழங்குடியினர் நலன் மற்றும் மத்திய சுகாதாரம், குடும்ப நலன் போன்ற அமைச்சகங்களின் முக்கிய நடவடிக்கைகளின் விளைவாக இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் பற்றிய பரிசோதனை ஆரம்ப கட்டத்திலேயே மேற்கொள்ளும் போது இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக நோயாளிகள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் ஆரம்ப கட்ட பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த நோய்க்கான வாய்வழி மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றது. இந்த நோய்க்கான சிகிச்சை வசதி கடைகோடிக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும்.
இந்த நோய் இந்தியா முழுவதிலும் குறிப்பாக 17 மாநிலங்களில் அதிக அளவிலான தாக்கம் இருக்கிறது. இந்த நோய்க்கு சிறப்பான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும், துறை சார்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரத்த அறிவியல் துறையும், இதர எய்ம்ஸ் மருத்துவமனைகளும் முக்கிய பங்காற்றுகிறது.