கலர்ஸ் தமிழ் SA20 லீக்கில் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் உடன் அறிமுக வர்ணனையாளராக கால்பதிக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்

 

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் SA20இன் ஒளிபரப்பை வழங்கவுள்ள வயாகாம்18 குழு நிபுணர்களாக சுரேஷ் ரெய்னா, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளது*

 

 

 

சென்னை, 7 ஜனவரி 2023: ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவின் டி20 பிரீமியர் லீக்கான SA20 இன் தொடக்க சீசனுக்கான தங்கள் நிபுணர் குழுவை வயாகாம்18 அறிவித்துள்ளது. குழுவில் சுரேஷ் ரெய்னா, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் JioCinema, Sports18 – 1 SD & HD, மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகியவையில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் போட்டியை நேரடியாகப் கண்டு மகிழலாம்.

 

ஜியோசினிமாவின் ஹிந்தியில் 2007 ஐசிசி உலக Twenty20 விளையாட்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஓஜா மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஓவைஸ் ஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 

 

ஜியோசினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் SA20யில் தமிழ் கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே கலந்துரையாட அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் இணைகின்றனர். தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பில் வெங்கடபதி ராஜுயுடன், தெலுங்கு ஜியோசினிமாவில் அக்ஷத் ரெட்டி, சந்தீப் பவனகா மற்றும் ஆர் ஜே ஹேமந்த் ஆகியோரும் இணைகின்றனர்.

 

SA20 ஆங்கில வர்ணனைக் குழு, AB டிவில்லியர்ஸ் வர்ணனையாளராக அறிமுகமாகி, அவரது முன்னாள் தேசிய அணி வீரர்களான மார்க் பௌச்சர், அஸ்வெல் ப்ரின்ஸ்,ஷாயுன் போலக், ஹேர்ஷிலி ஜிப்ஸ், B கிரிஷ் மோரிஸ் மற்றும் வெர்னோன் ஃளான்டர் ஆகியோரின் பழம்பெரும் வெற்றி குழுவை மீண்டும் இணைத்துள்ளது.

 

அனுபவம் வாய்ந்த மார்க் நிக்கோலஸ் முன்னாள் இங்கிலாந்து சர்வதேச வீரர்களான கெவின் பீட்டர்சன் மற்றும் டேரன் கோஃப் ஆகியோருடன் இணைவார். கூடுதலாக, சர்வதேச வரிசையில் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட்டின் முதல் பெண்மணி காஸ் நைடூ, உரோஜ் மும்தாஸ், பொம்மி எம்பாங்வா, மைக் ஹேஸ்மேன் மற்றும் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் டேரன் சமி ஆகியோர் அடங்குவர்.

 

SA20 ஜனவரி 10 ஆம் தேதி ரஷித் கான் தலைமையிலான MI கேப் டவுன் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸை எதிர்கொள்கிறது. போட்டியானது ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18 – 1 SD & HDஎச்டி மற்றும் கலர்ஸ் தமிழில் இரவு 8:30 மணி முதல் நேரலையில் காணலாம்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *