மாநில திறந்த நிலைப் பள்ளிகளுக்கான தேசிய கருத்தரங்கம்
சென்னை
மாநில திறந்த நிலைப் பள்ளிகளுக்கான தேசிய கருத்தரங்கம் 22 மற்றும் 23 டிசம்பர் 2022-ல் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெற்றது. தேசிய கல்வி கொள்கை – 2020-ஐ நடைமுறைப்படுத்துவதன் ஒரு மைல் கல்லாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய திறந்த நிலை பள்ளிகளுக்கான நிறுவனத்தின் (என்ஐஓஎஸ்) தலைவர், பேராசிரியர் சரோஜ் சர்மாவின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த 2 நாள் கருத்தரங்கில் புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கான ஆலோசனைகள் பெறும் களமாக இந்த கருத்தரங்கம் அமைந்தது. அத்துடன் திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வி அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு சென்றடையும் வழிவகைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றிய என்ஐஓஎஸ் தலைவர் பேராசிரியர் சரோஜ் சர்மா, புதிய தேசிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் பாரம்பரியத்தையும், மரபையும் முக்கியத்துவப்படுத்துகிறது என்றார்.
விவேகானந்தா கேந்திராவின் கிழக்குப் பகுதி தலைவர் திரு லட்சுமிநாராயணன் பாணிக்கிரஹி பேசும் போது, புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இந்தியாவின் கல்வியை மேம்படுத்தும் என்றும் கூறினார். இந்திய உணவுக்கழகத்தின் தனி இயக்குனர் திரு தெய்வப்பிரகாஷ் பேசுகையில், சமூகத்தில் கல்வியில் பின்தங்கியோர் பயனடைவதற்காக என்ஐஓஎஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி இந்த கருத்தரங்கில் உரையாற்றுகையில், அரசுடன் தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில்கல்வியின் தேவை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.