சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த முன்னோட்டம்

 

புதுதில்லி, 2022

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் 2022-ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது.குறிப்பாக பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மத்திய வக்ஃபு வாரியம் ஓராண்டுக்கு மறு சீரமைப்பு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

• 2014-15 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் பிரி-மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 4,43,50,785 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 52.24 சதவீதம் மாணவிகளாவர்.

• 2014-15 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 57,06,334 மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 55.91 சதவீதம் மாணவிகளாவர்.

• 2014-15 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில், தொழில்நுட்ப கல்வி பெறுவோருக்கான கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 10,02,072 பேர் கல்வி உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 37.81 சதவீதம் மாணவிகளாவர்.

• பிஎம் விகாஸ் எனப்படும் பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பள்ளி இடைநின்றோருக்கான கல்வி, சிறுபான்மை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

• மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் இடையே திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 11.10.2022 அன்று மேற்கொள்ளப்பட்டது.

• பிரதமரின் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தை இந்த அமைச்சகம் முனைப்பாக செயல்படுத்தியதன் மூலம் 8 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

• மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி கழகத்தின் மூலம் 14,12,425 பெண் பயனாளிகள் கடனுதவி பெற்றுள்ளனர்.

• மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் சார்பில், பிஎம்ஜெவிகே எனப்படும் பிரதமரின் பொது மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் வளர்ச்சி உள்கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மூலம் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. பிஎம்ஜெவிகே இந்தத் திட்டத்தை 2025-26 ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்த 15-வது நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

• மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் சார்பில், மத்திய வக்ஃபு கவுன்சில் கடந்த 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கும் இந்த கவுன்சில் 04.02.2022 முதல் 03.02.2023 வரையிலான காலகட்டத்திற்கு மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

• இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளில் 79,200 ஹஜ் பயணிகள் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர். இதில் 1,796 பெண் யாத்ரீகர்கள் ஆவர். ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான ஹஜ் கமிட்டி ஆகியவை இணைந்து கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்கு இடையே சிறப்பான பயண ஏற்பாடுகளை ஹஜ் பயணிகளுக்கு செய்து கொடுத்திருந்தது.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *