கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவு

 

நீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வேண்டும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நஞ்சநாடு, இத்தலார் ஆகிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் கலெக்டர் சா.ப.அம்ரித் முன்னிலை வகித்தார்.

நீலகிரி மாவட்டத்தில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இத் தேயிலை தொழிற்சாலைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர்.

தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து, தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் இண்ட்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் (பொ) மோனிக்கா ரானா, உதகை வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.