ராணுவ வீரர்களுக்கு வரி இல்லை
தேசப்பற்றை ஊட்டும்
கோவை கூடலூர் நகராட்சி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி இருக்கிறது. பேரூராட்சியாக இருந்த இந்தப் பகுதி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியின் தி.மு.க.வைச் சேர்ந்த அறிவரசு கூடலூர் உள்ளார். இந்நிலையில், கூடலூர் நகராட்சிக் கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அதன்படி, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரியில் இருந்து விலக்கு அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு நம்மிடம் கூறுகையில்; 100 பேருக்கு வரி விலக்கு அளித்தாலும், ஆண்டுக்கு ரூ.4-5 லட்சம்தான் செலவாகும். அதை சரிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் வருமானம் வருவதற்கு வழிவகை செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது இது ஒரு விஷயமே இல்லை.
“மற்றவர்களின் வாழ்வியலுக்கும், ராணுவ வீரர்களின் வாழ்வியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக, பலர் தினசரி காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவர்.
100 & 200 கி.மீ தொலைவில் பணியில் இருக்கும் சிலர் வாரம் ஒரு நாள் வீட்டுக்கு வருவார்கள். 500 கி.மீ தொலைவில் பணியில் இருப்பவர்கள் மாதம் ஒரு நாள் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், ராணுவ வீரர்கள் எந்த நல்லது, கெட்டதுக்கும் வரமுடியாது.
மனைவி, குழந்தைகளை நேரில் பார்க்க முடியாது. உறைய வைக்கும் குளிர், நக்சல்கள் இருக்கும் பகுதி என எங்கு பணியாற்ற சொன்னாலும், மறுபேச்சு இல்லாமல் அங்கு செல்ல வேண்டும். அவர்களின் பணிக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
வரி விலக்குக்கு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. ஒவ்வொரு நகராட்சியிலும் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உள்ளது. அவர்களுடன் கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ராணுவத்தில் பணியாற்றிய, பணியாற்றும் எல்லோருக்கும் இது பொருந்தும். 100 பேருக்கு வரி விலக்கு அளித்தாலும், ஆண்டுக்கு ரூ.4-5 லட்சம்தான் செலவாகும். அதை சரிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் வருமானம் வருவதற்கு வழிவகை செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது இது ஒரு விஷயமே இல்லை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் அழைத்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ராணுவவீரர், தன் குடும்பத்துடன் நேரில் வந்து கண்கலங்க பேசிச் சென்றார்.” என்றார். நாட்டுக்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு நிறைய இதுபோல செய்யலாம்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.