ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும்
“சென்னை டூ பாங்காக்”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை டூ பாங்காக்’. இப்படத்தில் ரோஜாக்கூட்டம் , ராமகிருஷ்ணா புகழ் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி, சந்தோஷி ,செர்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின், இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் : இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.. அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.. அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை. இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.விறு விறுப்பனா சண்டை காட்சிகளும் இடம்பெறுகிறது .

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ஸ்ரீலங்கா தாயலாந்து போன்ற இடங்களில் நடைப்பெற்றது .U.K.முரளியின் இசையில்,தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய,, இயக்குனர் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவர் இயக்குகிறார்கள் .
‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து – இயக்கம் ; சதீஷ் மற்றும் சந்தோஷ்
இசை ; U K முரளி
ஒளிப்பதிவு ; தேவராஜ் – பாலா
மக்கள் தொடர்பு : செல்வரகு

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *