கோவை குமரன் மார்க்கெட்டில் மஞ்சள் குலை, கரும்பு குவிந்தன

 

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் உற்சாகம் குறைந்து பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.

 

பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது.

 

கரும்பு, மண் அடுப்பு, மண் பானை, மஞ்சள் குலை போன்றவை கோவையில் பல இடங்களிலும் விற்பனை செய்யப் படுகின்றன.

 

லாரிகளில் கட்டு கட்டு கட்டாக கரும்பு வந்துள்ள நிலையில் வாங்க ஆள் வரமால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர.்

 

கரும்புக் கட்டுகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனையாகிறது. 10 எண்ணம் கொண்ட கரும்புக் கட்டு ரூ. 300 முதல் ரூ. 400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ. 30 முதல் ரூ. 40 வரையில் விற்கப்படுகிறது.

 

இதுபோல மஞ்சள் குலை விற்பனையும் விறுவிறுப்படைந்துள்ளது. ஒரு மஞ்சள் குலையுடன் கூடிய செடி ரூ. 10 முதல் ரூ. 20 வரையில் தரத்துக்கு ஏற்ப விற்பனையாகிறது கோவிட் பரவல் , லாக்டவுன் மக்கள் கூட்டம் சேர கூடாது என்பன உள்ளிட்ட காரணங்களால் கோவையில் பொங்கல் கரும்பு வாங்க மக்கள் ஆர்வமுடன் வர வில்லை. டன் கணக்கில் கரும்பு கொள்முதல் செய்து கோவை உட்பட பல மாவட்டங்களுக்கு விற்பனை வந்துள்ளோம.் சில மாவட்டங்களில் உற்ச்சாகம் இருந்தாலும் கோவையில் மந்த நிலையில் இருக்கிறது.

 

கடந்த ஆண்டைக் காட்டிலும் விற்பனை சரிவுதான். வியாழக்கிழமை வியாபாரம் ஓரளவுக்கு இருக்கும் என்று நம்பினார்கள்

 

ஆனால்

பொங்கல் விழா குறித்து அரசு மக்களுக்கு தெளிவாக வழிகாட்ட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

 

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212