விவசாயிகளுக்கு முன்னுரிமை: பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி திட்டத்தின் பிரதிபலிப்பு
சஞ்சய் அகர்வால்
செயலாளர், வேளாண் & விவசாயிகள் நலத்துறை, இந்திய அரசு
புதுதில்லி, டிசம்பர் 31, 2021
இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயத் துறையின் பங்கு கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தத் துறையின் முக்கியத்துவம் மிகவும் அதிகமாகும். இந்தியாவின் முக்கால்வாசி குடும்பங்கள் கிராமப்புற வருமானத்தை சார்ந்துள்ளன, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு தேவையான தானிய பயிர்களை விளைவிப்பதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிப்பதிலும், அதிகரித்து வரும் வருமானத்துடன் கூடிய மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நாட்டின் உணவு பாதுகாப்பு அடங்கியுள்ளது. இவற்றை செய்வதற்கு உற்பத்தி திறன் மிக்க, போட்டித்தன்மையுடன் கூடிய, பன்முகம் கொண்ட மற்றும் நிலைத்தன்மை மிக்க விவசாயத் துறை விரைவான வேகத்தில் இயங்க வேண்டும்.

இந்தப் பின்புலத்துடன், மாண்புமிகு பிரதமரால் வகுக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வையான, உற்பத்தித் திறன், சர்வதேசப் போட்டி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட விவசாயத் துறைக்கு உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்கான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைத் தொடங்குவதற்கு இந்திய அரசு எப்போதும் உறுதிபூண்டுள்ளது. .

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் தொடர்பான செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்கும் விவசாயத் தள்ளுபடியை விட விவசாயிகளுக்கான நீடித்த நிதி ஆதரவுகள் மிகவும் சிறந்தவை என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நாட்டிலுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு இத்தகைய கூடுதல் வருமான ஆதரவின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்கான லட்சியத் திட்டமான பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதியை மாண்புமிகு பிரதமர் 24.02.2019 அன்று தொடங்கினார்.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ. 6000/ மூன்று சம தவணைகளில் (ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூ. 2000/-). நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நேரடிப் பலன் பரிமாற்ற முறை மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த முன்மாதிரியான திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தொய்வில்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பல மைல்கற்களைத் தாண்டி, உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அதன் தெளிவான பார்வை, அளவு மற்றும் தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக நிதியை செலுத்துவது ஆகியவை பாராட்டப்படுகின்றன. உத்தரப்பிரதேச விவசாயிகளிடம் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், பிஎம்-கிசானின் பலன்கள் பெரும்பான்மையான விவசாயிகளுக்குச் சென்றடைந்ததாகவும், அவர்கள் முழுத் தொகையும் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது. அதே ஆய்வின்படி, விவசாயத்தை நம்பியிருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் கணிசமாக உதவியுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டின் விவசாயிகளின் நலனுக்காக அனைத்து மாநிலங்களும் இந்த உன்னத நோக்கத்தில் பங்களிப்பதை உறுதி செய்வதற்காக, திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அவ்வப்போது திருத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் உண்மையிலேயே கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212