மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் ஒருநாள் பயிற்சி

 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய முனைவர் சாமி சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியானது தொடங்கியது.

இப்பயிற்சியானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உள்ள செயல்பாடுகளை விளக்கும் விதமாக 30 கேள்விகளை உள்ளடக்கி மதிப்பீடு செய்யும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சியானது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி கிருஷ்ணாஜிப்பட்டினம், அரசு உயர்நிலைப்பள்ளி கோபாலபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி இடையாத்தி மங்கலம் ,அரசு மேல்நிலைப்பள்ளி பெருமருதூர், அரசு மேல்நிலைப்பள்ளி அம்பலவாணநேந்தல் மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளி ஜெகதாப்பட்டினம் போன்ற உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்றது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு முத்துக்குமார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் அங்கயற்கண்ணி மற்றும் சிறப்பாசிரியர்கள் கோவேந்தன் மணிமேகலை இயன்முறை மருத்துவர் செல்வகுமார் மற்றும் அனைத்து உயர் தொழிநுட்ப ஆய்வக தலைமையாசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212