இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாமில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி தந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பாராட்டு.

 

புதுக்கோட்டை,டிச.9: இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி முகாமில் மருத்துவ முகாம் ஏற்படுத்தி தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமுவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கலவித்திட்ட மாநில அளவிலான கலைப்பயண கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை ஜெ.ஜெ.அறிவியல் கலை கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டலின்படி நடைபெற்று வருகிறது..

அதற்கான துவக்க விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் “கலைகள் மீது ஆர்வம் கொண்ட நான் உங்களை எல்லாம் ஓரே இடத்தில் காண்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..கலைஞர்களாகிய உங்களுக்கு இந்த பயிற்சியின் போது என்ன உதவிகள் தேவை என்றாலும் கேளுங்கள் செய்து தருகிறேன்.அதே போல் நேரம் கிடைக்கும் பொழுது உங்களை இந்த பயிற்சியின் பொழுது நேரில் சந்திப்பேன்” என கூறிச் சென்றார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் பயிற்சி நடக்கும் இடத்திலே நடமாடும் மருத்துவ குழு மூலம் மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர்கள் ஸ்ரீதர்,பிரசாந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மருத்துவ முகாமில் தமிழகம் முழுவதும் வந்திருந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைகள் பெற்று தங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை பெற்றுக் கொண்டனர்.பின்னர் கோவிட் 19 தடுப்பூசி போடதவர்கள் முதல் தவணை தடுப்பூசியும்,முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இவ்வாறு நாட்டுப்புற கலைஞர்களின் தேவை அறிந்து மருத்துவமுகாம் நடைபெற உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நாட்டுப்புற கலைஞர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

முகாமில் செவிலியர் ராஜலட்சுமி,சுகாதார ஆய்வாளர் செல்வராசு,நடமாடும் மருத்துவக் குழு உதவியாளர் நெப்போலியன்,ஓட்டுனர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5212