மணமேல்குடி ஒன்றியத்தில் பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடங்கியது.

 

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு.முத்துக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு இளங்கோவன் மற்றும் பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி மீனாட்சி அவர்கள் இருவரும் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இல்லம் தேடி கல்விக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில் கல்வி கற்பதற்கான செயல்பாடுகளை கரகம் , பறையாட்டம், ஒயிலாட்டம், வீதி நாடகங்கள் , பாடல்களுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துச் சொன்னார்கள்.

அதேபோல் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தன்னார்வலர்களை பதிவு செய்வதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்கள் மூலம் விளக்கினார்கள்.

இல்லம் தேடி கல்வியினை எவ்வாறு கிராம பகுதிகளில் நடத்துவது பற்றியும் நாடகங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இதேபோல் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும் எடுத்துக் கூறினார்கள்.

இக்கலை நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைத்து ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், இயன் முறை மருத்துவர், அனைத்து மாணவர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107