2024-25 ஆம் ஆண்டுக்குள் மீன் ஏற்றுமதி மதிப்பை ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது – டாக்டர் எல் முருகன்

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீனவளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், 2024-25 ஆம் ஆண்டுக்குள் மீன் ஏற்றுமதியை ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கொச்சியில் உள்ள தோப்பம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இதனைத் தெரிவித்தார்.

கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப் உட்பட நாட்டில் உள்ள ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று டாக்டர் எல் முருகன் தெரிவித்தார். இதன் பகுதியாக ஐஸ் தயாரிப்பு மையங்கள், பதப்படுத்தும் வசதிகள், துறைமுகத்திலேயே ஏற்பாடு செய்யப்படும். துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படுவதன் மூலம், மீனவர்கள் தங்களது மீன்களுக்கு நல்ல விலை பெறமுடியும் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள கடல்பாசி பதப்படுத்தும் மையம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது மீன்வளத்துறையில் பெண்களின் பொருளாதார அதிகாரமயமாக்கலையும், வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹிபி ஈடன், கொச்சி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் டாக்டர் எம் பீனா ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.

காலையில், கொச்சி துறைமுகத்திற்கு வந்திறங்கிய அமைச்சருக்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அன்பான வரவேற்பு அளித்தனர்.

 

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107