திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வருகின்றனர். இங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் உலக முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இங்கு இயற்கையாகவே அமைத்துள்ள தூண் பாறை , பசுமை பள்ளத்தாக்கு, பைன் மர காடுகள், நட்சத்திர ஏரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறை வசதி குறைவாகவே உள்ளது. கழிப்பறை வசதி குறைவாகவே காணப்படுவதால் பெண்கள் குழந்தைகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கூடுதலாக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107