மேற்கு வங்க மாநிலத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி, சென்னை, மணலியில் தங்கி வேலை செய்தபோது, கைது.
வெளிமாநில நபர்களை வேலைக்கு அமர்த்தும்போதும், வீடு வாடகைக்கு கொடுக்கும்போதும் பொதுமக்கள் நன்கு விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவிப்பு.

மேற்கு வங்காளம் மாநிலம், பிர்பும் மாவட்டம், போல்புர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.10.2021) காலை, சென்னை பெருநகர காவல், M-7 மணலி புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்து, தங்களது காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி, ஒபைதார் ரஹமான் (எ) சுராஜ் என்பவர் தற்போது, சென்னையில், மணலி பகுதியில் பதுங்கியிருப்பதாகவும், அவரை பிடிக்க உதவும்படியும் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், M-7 மணலி புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 தலைமைக் காவலர்கள், மேற்கு வங்க காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து விசாரணை செய்தும், எதிரியின் புகைப்படம் கொண்டு சுற்றுப்புறத்தில் நன்கு விசாரித்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும், எதிரி ஒபைதார் ரஹமான் (எ) சுராஜ் என்பவர் மணலி புதுநகர் பகுதியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் கட்டும் கட்டுமான பணி செய்து வருவது தெரியவந்தது. மேலும், மேற்படி கட்டுமானம் நடைபெறும் இடத்தில் எதிரி கொடுத்த ஆவணங்களை கொண்டு விசாரணை செய்ததில், எதிரி ஒபைதார் ரஹமான் (எ) சுராஜ் இங்கு சித்தாள் வேலை செய்து வந்தது உறுதியானது.
அதன்பேரில், காவல் குழுவினர்கள் மேற்படி இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து, மேற்கு வங்க மாநில கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒபைதார் ரஹமான் (எ) சுராஜ், வ/27, த/பெ.ஜில்லார் ரஹமான், வில்கீத்தா, பிர்பம் மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவரை கைது செய்தனர். பின்னர் மேற்கு வங்க காவல் குழுவினர் எதிரி ரஹமான் (எ) சுராஜ் என்பவரை மேற்கு வங்காளம் அழைத்துச் செல்ல சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
M-7 மணலி புதுநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில், எதிரி ஒபைதார் ரஹமான் (எ) சுராஜ் கடந்த ஜுலை மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும், கடந்த 15 நாட்களாக, அவரது மனைவி சபாஜான பீவி என்பவருடன் மேற்படி கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சித்தாள் வேலை செய்து,அங்கேயே தங்கி வந்ததும் தெரியவந்தது.
ஆகவே, வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு வரும் நபர்களை அவர்களது ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற ஆவணங்களை சரிபார்த்து, விசாரித்து உறுதி செய்த பின்னர் வேலைக்கு அமர்த்தவோ, வீடுகள் வாடகைக்கு கொடுக்கவோ செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இவ்வாறு வரும் வெளிமாநிலத்தவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கம்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107