Swachhata : 20 Historical Years

தூய்மை: வரலாற்று சிறப்புமிக்க 20 ஆண்டுகள்


ஹர்தீப் சிங் பூரி
ஒரு நாட்டின் வரலாற்றில் 20 ஆண்டுகள் குறுகிய காலம்; ஆனால் நாட்டின் வளர்ச்சியில் நீடிக்கும் அடித்தளம் அமைப்பதற்கு ஒரு தனிநபருக்கு போதிய அளவிற்கும் அதிகமானதாக இது இருக்கிறது.
பொதுமக்கள் பணிக்கான உயர்ந்த அதிகாரத்தில் வெற்றிகரமான 20 ஆண்டுகளை 2021 அக்டோபர் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். முதலில் குஜராத்தின் முதலமைச்சராகவும், பின்னர் இந்தியாவின் பிரதமராகவும் 20 ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தது அவரது தலைமைத்துவத்தை பெருமைப்படுத்தியிருக்கிறது.
பிரதமரின் சிந்தனை, காந்தீய கோட்பாடுகளான சர்வோதயா மற்றும் தற்சார்பால் வழிநடத்தப்படுவதாகும். பிரதமருக்கு மிகவும் குறிப்பிடத் தகுந்த தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட பல முக்கியமான கொள்கைகளின் ஊக்கசக்தியாக காந்தி அவர்களின் தத்துவம் அமைந்துள்ளது. தூய்மை என்பதை முதன்முதலாகப் பிரச்சாரம் செய்தவர் காந்தி அவர்கள். 1916 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தூய்மையின் முக்கியத்துவம் பற்றி அவர் பேசினார். “சுதந்திரத்தை விட மிகவும் முக்கியமானது துப்புரவாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
2005 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்ட ‘நிர்மல் குஜராத்’ திட்டம், வளர்ச்சி நிலைத்து நிற்பதற்கான அச்சாணியாக இருப்பது அனைத்துப் பகுதிகளிலும் தூய்மை என்ற முதலமைச்சர் மோடியின் நம்பிக்கை, காந்தி, அவர்களின் நிறைவேறாத கனவை இணைத்த நூலாக விளங்கியது. சமூக ஈடுபாடு, பெண்கள் தலைமையில் அமலாக்கம், நடைமுறை மாற்றத்தில் கவனம், தேவைக்கு ஏற்ற அணுகுமுறை, நிதி சார்ந்த ஊக்குவிப்புகள் போன்ற பல முக்கியமான அம்சங்களை நிர்மல் குஜராத் திட்டம் அறிமுகம் செய்தது.
2005-க்குப் பின் குஜராத்தில் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாக தூய்மை இந்தியா இயக்கம் என்ற சிந்தனை உருவானது. இதன் மூலம் காந்திஜியின் கனவை நனவாக மாற்ற முடிந்துள்ளது. செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தூய்மை இந்தியா இயக்கம் என்பதை முதன் முறையாக பிரதமர் அறிவித்தார். இந்த

அறிவிப்பு 130 கோடி இந்தியர்களின் பார்வையில் அவரை மதிப்புமிக்கவராக்கியது. தங்கள் தலைவரின் மரபு ஒவ்வொரு குடிமகனின் கௌரவத்தைக் காப்பாற்றும் ஆழமான உணர்வு ஆகியவற்றை அவர்கள் கண்டனர்.
இந்த நாட்டினைத் திறந்தவெளியில் மலம் கழிக்காத ஒரு நாடாக மாற்றுவது சாத்தியமற்றது என்று ஒரு சில அவநம்பிக்கைவாதிகள் நினைத்தனர். 2014-ல் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலை வெறும் 38 சதவீதம் என்பதிலிருந்து இப்போது ஏறத்தாழ 100 சதவீத அளவிற்கு வந்துள்ளது. இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விதிவிலக்காக இருப்பது மேற்குவங்க மாநிலமாகும். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு ஓர் உதாரணமாகப் பிரதமர் தாமே தூய்மைப் பணியை மேற்கொண்டு இதில் நம் அனைவரையும் தூய்மை செயற்பாட்டாளர்களாக மாற்றியுள்ளார்.
தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 73 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டு நகரப் பகுதிகளில் 18 சதவீதமாக இருந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைத் திறனை தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது. ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இடம் பெற்ற நடத்தை மாற்றம் உண்மையான வெற்றியாக அமைந்தது.
கடந்த காலத்தின் எந்தவொரு நிர்வாகத்தை விடவும் கூடுதல் நிர்வாக சீர்த்திருத்ததை அவர் செய்திருப்பதாகவும் நான் நம்புகிறேன். கழிப்பறைகள், வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் தேவைகள், குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் சீர்த்திருத்தங்களின் மீது நம்பிக்கை வைத்து அவர் செயல்படுத்தி உள்ளார். நிச்சயமற்ற, நம்ப இயலாத கட்டுக்கதைகள் நிறைந்த உலகில் நமது ‘பிரதம சேவகர்,’ இந்த இயக்கத்திலிருந்து ஒருபோதும் ஊசலாட்டமில்லாத உயர்ந்த மனிதராகத் திகழ்கிறார்.
(கட்டுரையாளர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடுகள் துறையின் மத்திய அமைச்சராவார்).

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107