திருக்குறளின் பத்து அதிகாரத்தில் 100 குறட்களை 4 நிமிடம் 20 நொடிகளில் கூறி கோவையை சேர்ந்த பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்..

 

 

கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த லலிதாம்பிகை,ராஜசேகர் தம்பதியினரின் மகள் சிவசங்கரி.ஒண்பதாம் வகுப்பு பயின்று வரும் இவர்,சிலம்பம்,பாக்சிங் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் கலந்து கொண்டு சாதனை படைத்தவர்.இந்நிலையில் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட மாணவி சிவசங்கரி,திருக்குறளின் அனைத்து குறட்பாக்களையும் வேகமாக கூறுவதில் தனித்திறமை கொண்ட இவர்,திருக்குறள் உலகம் அகாடமியின் நிறுவனர் திருக்குறள் கணேசணிடம் பயிற்சி பெற்று, திருக்குறளின் பத்து அதிகாரத்தில் உள்ள 100 குறள்களை நான்கு நிமிடம் இருபது நொடிகளில் கூறி நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.வேகமான வார்த்தை உச்சரிப்புடன்,தெளிவாக குறள்களை கூறி சாதனை படைத்த மாணவி சிவசங்கரிக்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.சாதனை புரிந்த மாணவிக்கு, நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரிவித்தார்..

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107