மெட்ரோ ரயில் பணியை முன்னிட்டு, அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் RTO அலுவலகம் முதல் ஆண்டர்சன் தெரு வரை மெட்ரோ இரயில் நிலையம் கட்டுமான அலுவல் துவக்கப்பட உள்ளதால், 19.10.2021 செவ்வாய்கிழமை அன்று முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே 19.10.2021 அன்று முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

  1. ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

 

  1. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

 

  1. ஆண்டர்சன் சாலையில் அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வழக்கம் போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம்.

 

  1. ஆண்டர்சன் சாலையில் கான்ஸ்டிபள் சாலை சந்திப்பிலிருந்து அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல இயலாது.

 

  1. அத்தகைய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை & பில்கிங்கடன் சாலை சந்திப்பிலிருந்து, பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

 

  1. கனரக வாகனங்கள், கான்ஸ்டிபள் சாலை & பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபள் சாலை (இரயில்வே மருத்துவமனை), போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

 

  1. கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறமாக திரும்பி ஆண்டர்சன் சாலை மற்றும் கான்ஸ்டிபள் சாலை வழியாக செல்லலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107