மீன்பிடி துறைமுகம் பகுதியில்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சரித்திர பதிவேடு  குற்றவாளி கைது. 

1.3 கிலோ கஞ்சா பறிமுதல். 

 

சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், இன்று (16.10.2021) காலை புது வண்ணாரப்பேட்டை, பல்லவன் நகர் 2வது தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடிக்க முற்பட்ட போது, ஒருவர் தப்பியோடவே மற்றொரு நபரை காவல்குழுவினர் மடிக்கி பிடித்து, விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  சூர்யா,  வ/29,  த/பெ.விஜயகுமார், எண்.197, பல்லவன் நகர் 1வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றொரு குற்றவாளியான ராம்குமார் (எ) டாட்டூ குப்பன் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா என்பவர் N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 அடிதடி வழக்குகள், 1 திருட்டு வழக்கு உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட சூர்யா விசாரணைக்குப் பின்னர்,  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107