கொடைக்கான‌லில் மிரட்டி வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில் தற்போது தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை தற்பொழுது மிரட்டியோ மிகுந்த அழுத்தம் கொடுத்தோ வசூலிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தாங்கள் கொடுத்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று மிரட்டும் தோணியில் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் மூலமாக மகளிர் குழுவினருக்கு வழங்கிய கடனை வட்டி, வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து இந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த கலெக்சன் ஏஜென்டுகள் கொடைக்கானலுக்கு வந்து பெண்கள் குழுவினரிடம் அதிரடியாக கடனை வசூல் செய்து வருகின்றனர். தற்போது அதிக வட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாட்கள் மிரட்டி வருவதாகவும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர் .

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107