திருப்பூர்:

 

பனியன் தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:

 

திருப்பூரில் பிரதான தொழிலாகக் கருதப்படும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்க்கு சம்பள உயர்வு வேண்டி பல சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சூழ்நிலையில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகின்ற 28ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக ஆடை உற்பத்தியாளர்களும் தொழிற்சங்கங்களும் இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் டீமா சிம்கா டெக் மா ஆகிய உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோல் அண்ணா தொழிற்சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி .) (சி .ஐ. டி .யு .ஐ .என் .டி .யு .சி .எம். எல். ஏ .எஸ் .எம். எஸ் .பி. எம். எஸ். எல் பி . பங்கேற்று வருகின்றன.சம்பள உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை ஏழாவது சுற்றாக நேற்று சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதி துரைசாமி தலைமை தாங்கினார். தொழிற்சங்கம் தரப்பில் நடப்பு சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் உயர்வு வழங்க கேட்டுள்ளது.அதனால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி 28 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தெரிவித்தனர். 28ஆம் தேதி நடக்கிறது சாயப்பட்டறை பிரச்சனை மின்வெட்டு இருந்த காலத்தில்கூட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு குறிப்பிடத்தக்க சதவீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அளவு மோசமான நிலை இல்லாததால் நியாயமான சதவீதம் உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க தரப்பு நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை என்று வருகின்ற 28ம் தேதி எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107