சென்னை பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து மண்டல அமலாக்க குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து, இன்று முகக்கவசம் அணியாத 1,679 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ரூ.3,35,800/- அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

 

கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் (Zonal Enforcement Teams – ZETs) 16.09.2021 முதல் 26.09.2021 வரை சென்னை பெருநகரின் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை (Mask Enforcement Drive) பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்த 15 மண்டல அமலாக்க குழுவினர் (ZET), இன்று (20.09.2021) பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி நகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு சோதனையில், முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 1,679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் ரூ.3,35,800/- வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், கடந்த 16.9.2021 முதல் 20.9.2021 வரையிலான 5 நாட்களில் மண்டல அமலாக்க குழுவினர் (ZET) சோதனையில் 8,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.16,10,200/- அபராதம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கொரோனா தொற்று 3வது அலை ஏற்படாத வண்ணம் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107