ஐஸ் அவுஸ் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற பெண்மணி கைது. 105 மதுபாட்டில்கள் பறிமுதல்.

 

 

 

சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (20.09.2021) இரவு சுமார் 09.30 மணியளவில் இராயப்பேட்டை, முத்தையா தோட்டம் தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே கண்காணித்தபோது, அங்கு ஒரு வயதான பெண்மணி சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த பொம்மி, பெ/வ.70, க/பெ.செல்லப்பன், செல்லம்மாள் தோட்டம் தெரு, இராயப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட பொம்மி மீது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107