கல்லூரியில் படித்த தோழியிடம் சிறை அதிகாரி எனவும், விவாகரத்து பெற்று தருவதாகவும் கூறி ரூ.13 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து, மிரட்டிய நபர் கைது. போலி அடையாள அட்டை மற்றும் 1 வாக்கி டாக்கி பறிமுதல்

   

 

சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டு, சிவசுப்பிரமணியம் நகரில் வசித்து வரும் லஷ்மிபிரியா, வ/31, த/பெ.முத்துகுமார் என்பவர், தன்னுடன் கல்லூரியில் படித்த மதன்குமார் என்பவர் சிறைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், கணவரை பிரிந்து வாழும் தனக்கு விவாகரத்து பெற்றுத் தருவதாகவும் கூறி, சிறிது சிறிதாக என ரூ.13 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும், தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது மிரட்டியதாகவும், மதன்குமார் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை பெற்றுத்தருமாறு T-1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

T-1 அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றம் சாட்டப்பட்ட மதன்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், புகார்தாரர் லஷ்மிபிரியா என்பவர் திவாகர் என்பவரை திருமணம் செய்து, 8 வயதில் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், லஷ்மிபிரியாவுடன் கல்லூரியில் படித்த மதன்குமார் என்பவர் சமீபத்தில் லஷ்மிபிரியாவை சந்தித்து, தான் சிறைத்துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் லஷ்மிபிரியாவிற்கு விவாகரத்து பெற்று தருவதாகவும், கூறி நம்ப வைத்து, சிறிது சிறிதான என ரூ.13 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, மோசடி செய்ததும், லஷ்மி பிரியா தனது பணத்தை திரும்ப தருமாறு மதன்குமாரிடம் கேட்டபோது, மதன்குமார் பணத்தை தராமல், தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டி அனுப்பியதும் தெரியவந்தது. 

மேலும் விசாரணையில், மதன்குமார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், சிறைத்துறை அதிகாரி போல போலி அடையாள அட்டை மற்றும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டு சிறைத்துறை அதிகாரி என கூறியதும் தெரியவந்தது.

அதன்பேரில், T-1 அம்பத்தூர் காவல் நிலையத்தில், பொது ஊழியர் போல ஆள்மாறாட்டம், மோசடி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி மதன்குமார் (எ) மதன், வ/32, த/பெ.பச்சைமணி, இந்திராநகர் மெயின் ரோடு, புழல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து போலி அடையாள அட்டை மற்றும் 1 வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

 

விசாரணைக்குப் பின்னர் எதிரி மதன்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107