திருநின்றவூர் பகுதியில்  இரவு மது போதையில் 6 வங்கி ATM மையங்களில் உள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தின் கண்ணாடி திரையை சுத்தியால் அடித்து சேதப்படுத்திய நபர் கைது.

 

நேற்று (20.09.2021) இரவு சுமார் 09.30 மணியளவில், திருநின்றவூர், பிரகாஷ் நகர் மெயின் ரோட்டிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி, ATM மையத்திலுள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தின் கண்ணாடி திரையை ஒரு நபர் சுத்தியலால் அடித்துவிட்டு செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், T-11 திருநின்றவூர் காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இரவு CTH மெயின் ரோடு அருகே சுத்தியலுடன் சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் சேஷாத்திரி, வ/50, த/பெ.ஜெயராமன், எண்.6, 6வது குறுக்குத் தெரு, பிரகாஷ் நகர், திருநின்றவூர், சென்னை என்பதும், மது பழக்கத்திற்கு அடிமையான சேஷாத்திரி சில நாட்களுக்கு முன்பு வீட்டினருகிலிருந்த வங்கி ATM மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சித்தபோது, பணம் வராததால் கோபத்தில் இருந்ததாகவும், நேற்று (20.09.2021) இரவு மது போதையில் வீட்டிற்கு சென்றபோது, மனைவியுடன் தகராறு ஏற்பட்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் வீட்டிலிருந்து சுத்தியலை எடுத்துக் கொண்டு, பிரகாஷ் நகர் மற்றும் CTH பிரதான சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 3 ATM மையங்கள், ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என 6 ATM  மையங்களுக்கு நடந்து சென்று அங்குள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தின் கண்ணாடி திரைகளை சுத்தியலால் உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

இது குறித்து SBI வங்கியின் மேனேஜர் அர்ச்சனா என்பவர் T-11 திருநின்றவூர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து, எதிரி சேஷாத்திரி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 இரும்பு சுத்தியலை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சேஷாத்திரி விசாரணைக்கு பின்னர், இன்று (21.09.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107