தாம்பரம் பேருந்து நிலையம் அருகே பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய நபர் கைது. 1 செல்போன் பறிமுதல்.

 

சென்னை, முடிச்சூர், அம்பேத்கர் நகர் 5வது தெருவில் வசிக்கும் ஹெலன்மேரி, பெ/வ.35 என்பவர் நேற்று (20.09.2021) இரவு 09.30 மணிக்கு பணிமுடித்து வீட்டிற்கு செல்ல, தாம்பரம் இரயில் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிலையம் அருகில் இருந்த ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, அவ்வழியே நடந்து சென்ற நபர் ஒருவர் ஹெலன்மேரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். ஹெலன்மேரி சத்தம் போடவே, அருகிலிருந்த நபர்கள் மற்றும் S-11 தாம்பரம் காவல் நிலைய ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் துரத்திச்சென்று செல்போன் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்து, காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்று S-11 தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

S-11 தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் கதிரவன், வ/28, த/பெ.நடராஜன், வடக்கு வீதி, சிங்கபெருமாள் கோயில், செங்கல்பட்டு மாவட்டம் என்பதும், ஹெலன்மேரியிடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பி ஓடியபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

அதன்பேரில், S-11 தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரி கதிரவன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் எதிரி கதிரவன் இன்று (21.09.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107