எழும்பூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது. 4.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 எடை இயந்திரம் பறிமுதல் .

 

 

 

சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (21.09.2021) காலை, எழும்பூர், எத்திராஜ் சாலை மற்றும் பி.வி.செரியன் சாலை சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களிடம் விசாணை செய்தபோது, இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின்பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அரவிந்த், வ/27, த/பெ.அருளானந்தம், துவாரகா அடுக்குமாடி குடியிருப்பு, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, முகப்பேர், சென்னை மற்றும் ரமீஸ்கான், வ/24, த/பெ.அமீத், வடக்கு முஸ்லீம் தெரு, காயல்மொழி, தூத்துக்குடி ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (21.09.2021) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107