உலக தென்னை தின விழா…!Arasu Malar

தென்னை வளர்ச்சி வாரியம், 23-வது உலக தென்னை தினத்தை “கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பை உள்ளடக்கிய, நெகிழ்திறன் மற்றும் நிலையான தென்னை சமூகத்தை உருவாக்குவது” என்ற தலைப்பில் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் பிரிவுடன் இணைந்து செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக தென்னை தின கொண்டாட்டம் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நினைவாக ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தென்னை வளர்ச்சி வாரியம் ஒவ்வொரு ஆண்டும் உலகத் தென்னை தினத்தை கொள்கை வகுப்பாளர்கள், முற்போக்கு விவசாயிகள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், மத்திய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில வேளாண்மை / தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலுமுள்ள தென்னை சாகுபடி செய்யும் நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதியை உலக தென்னை தினமாக அனுசரிக்கின்றன. இது 1969-ல் ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் நிறுவப்பட்ட சர்வதேச தென்னை சமூகம், தென்னை சாகுபடி செய்யும் நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இந்தியா சர்வதேச தென்னை சமூகத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். தென்னை தினத்தை கடைப்பிடிப்பதன் நோக்கம் தென்னை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்க உதவுகிறது.
தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று சூழ்நிலை காரணமாக நடப்பு ஆண்டு தேசிய அளவிலான தென்னை தின விழா இணையவழி கருத்தரங்கு வாயிலாக நடைபெறுகிறது. இவ்விழாவினை மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உயர்திரு. நரேந்திர சிங் தோமர் அவர்கள் விழாவினை துவக்கி முக்கிய உரையாற்றுகிறார். மேலும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை அமைச்சர்கள் செல்வி.ஷோபா கரண்லாஜே மற்றும் உயர்திரு. கைலாஸ் சௌத்ரி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். மேலும் திரு.சஞ்சய் அகர்வால் இ.ஆ.ப., செயலாளர், வேளாண் கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை அவர்களும் விழாவில் உரையாற்றுகிறார்.
திரு.ராஜ்பீர் சிங் இ.ஆ.ப., இணைச் செயலாளர், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தலைவர், தென்னை வளர்ச்சி வாரியம், அவர்கள் விழாவின் போது வரவேற்புரை வழங்குகிறார். தென்னை சாகுபடி செய்யும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 500

தென்னை விவசாயிகள், இந்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில வேளாண்மை / தோட்டக்கலைத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழில் முனைவோர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வில், தென்னையில் பூச்சி மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் நீர் பொருட்களுக்கான வாய்ப்புகள் பற்றிய ஆலொசனைகள் நடைபெறும். மேலும் பங்கேற்கும் விவசாயிகளுக்கு கலந்தாய்வு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613