100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர் கோவை.செப். கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தின், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திருவள்ளுவர் நகரில் தி.மு.க ஊராட்சி மன்ற உறுப்பினர் குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து பையாகவுண்டர் அவர்களிடம் கூறும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்றி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்திட அயராது பாடுபடுவோம் என்றும், விரைவில் அமைய உள்ள கழக ஆட்சி நிச்சயம் மாணவர்களின் நலன் காக்கும் என்று கூறினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, ரகுபதி, ஆனைகட்டி…

Read More