மனைவி மரணத்தில் மர்மம்

தேனி: மனைவி மரணத்தில் மர்மம்! – கைக்குழந்தையோடு கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய நபர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன். இவர், இன்று காலை தனது 2 வயதுக் குழந்தை மற்றும் கைக் குழந்தையோடு கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.“என் மனைவி ராஜியை (வயது 22) இரண்டாவது பிரசவத்துக்காக, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி சேர்த்தேன். அவருக்கு உதவியாக, என் மாமியார் அவருடன் இருந்தார். என் மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் ரிசல்ட் என வந்தது. 17-ம் தேதி அதிகாலை என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் 20-ம் தேதி வரை, பிரசவ வார்டில் இருந்தனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அன்றைய தினமே, திடீரென…

Read More